தமிழ் connections #24

நாம் ஊடல் கொண்டாடும்
காலம் மறைந்து தேடலாய் மாறியது ஏனோ..

உன்னை தேடாத இடமில்லை
காணாத மூலையும் இல்லை
எங்கு தொலைத்தேன்
ஏது தொலைத்தேன்
என தெரியாமல் நான் நின்றேன்.

நீ இல்லாத இடம்
சுடுகாடாய் காட்சி அளித்தது
பார்வையும் மங்கல் ஆனது.

கண்ணாடி பார்த்தேன்
அதில் உன்னை பார்த்தேன்
மூடனாய் மாற்றி விட்டாய் என தனியே சிரித்தேன்.

என்னுள் ஒளிந்து விளையாடுவது
உனக்கு பிடித்த நாடகமே…

கண்ணாடி பார்த்தேன்
அதில் உன்னை பார்த்தேன்
மூடனாய் மாற்றி விட்டாய் என தனியே சிரித்தேன்.

அந்த கண்ணாடி தான் காட்டியது
மூக்கு கண்ணாடி
என் சட்டை பையிலே
இருந்ததென்று.

3 thoughts on “தமிழ் connections #24”

  1. மன இருட்டில் தொலைந்தால் …வெளி வெளிச்சம் உள் புகுமோ?…தொலைந்தது அப்போ கிட்டுமோ??…அருமைங்கோ!👍👍👌👌

    Liked by 1 person

Leave a comment